உலக கிரிக்கெட் அமைப்புகளில் பிசிசிஐ மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியமாக திகழ்கிறது. இதன் நிகர மதிப்பு 2.25 பில்லியன் அமெரிக்க டாலராகும். அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.18,700 கோடியாகும். 2வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வாரியத்தின் நிகர மதிப்பு 79 மில்லியன் டாலராகும். இது இந்திய மதிப்பில் ரூ.600 கோடி. கிரிக்கெட். ஆஸ்திரேலியாவை விட பிசிசிஐயின் நிகர மதிப்பு 28 மடங்கு அதிகமாகும். இதில் ஐபிஎல் தொடர் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த வரிசையில் தென்ஆப்ரிக்கா 47 மில்லியன் டாலருடன் 6வது இடத்தில் உள்ளது. இது பிசிசிஐயின் நிகர மதிப்பில் 2 சதவீதம் மட்டுமே. 59 மில்லியன் டாலருடன் இங்கிலாந்து 3வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிகர மதிப்பு 55 மில்லியன் டாலராக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடரை நடத்துவதன் மூலம் தென்ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் 68.7 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.