Skip to content
Home » பிபிசி ஆவணப்படம்…. மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பிபிசி ஆவணப்படம்…. மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

 2002-ம் ஆணடு  மோடி குஜராத்தில் முதல்-மந்திரியாக இருந்த நேரத்தில் நடந்த குஜராத் கலவரம் பற்றி  பிபிசி செய்தி நிறுவனம் ஓர் ஆவண படத்தை தயார் செய்தது. அந்த ஆவணப்படமானது தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கூறி அந்த ஆவணப்படத்திற்கு இந்தியாவில் மத்திய அரசு தடை விதித்தது.

இந்த தடை உத்தரவை மீறி அந்த ஆவணப்படத்தை திரையிட்டு, திரையிட முயற்சி செய்துடில்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் மாணவர்கள் பலகட்ட போராட்டங்களை எதிர்கொண்டனர். இந்நிலையில், பிபிசி ஆவணப்படத்திற்கு தடை விதித்த மத்திய அரசு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிலர் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. அப்போது, பிபிசி ஆவணப்பட தடையை நீக்க கோரிய மனு மீது மத்திய அரசு பதில் அளிக்கவும், ஆவணப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடைக்கான அசல் உத்தரவை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *