Skip to content
Home » வங்க கடலில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்தது

வங்க கடலில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்தது

  • by Authour

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர – வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னையில்  நேற்று இரவு  முதல் இன்று காலை வரை மிதமான மழை பரவலாக பெய்தது.  குறிப்பாக சென்னை சென்டிரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராய நகர், சேத்துப்பட்டு, புரசைவாக்கம், கோயம்பேடு, மதுரவாயல், புதுப்பேட்டை, அண்ணாசாலை,வடபழனி, அசோக் நகர், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  இன்று காலை வரை மழை பெய்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5. 30 மணிக்கு ஆழ்ந்து காற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்தது. இதனால் மழை குறையும். கடலோரங்களில் மிரமான மழை பெய்யும்,  குறிப்பாக தமிழ்நாடு, புதுவையில்  இடி மின்னலுடன் மழை இருக்கும் என  வானிலை மையம் அறிவித்து உள்ளது.

திருச்சி மாவட்டத்திலும் இன்று அதிகாலை முதல் பரவலாக நசநசவென மழை தூறியது.  தொட்டியம் முதல் திருச்சி சத்திரம் வரை காலை 8 மணி வரை தூறிக்கொண்டே இருந்தது. அதே நேரத்தில்  ஜங்ஷன் பகுதியில் மழை இல்லை. ஆனால் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.  இதுபோல தஞ்சையிலும் அதிகாலையில் மழை பெய்தது.  பின்னர் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.