Skip to content
Home » பவதாரிணியின் உடல் இன்று இரவு தேனி கொண்டு செல்லப்படுகிறது..

பவதாரிணியின் உடல் இன்று இரவு தேனி கொண்டு செல்லப்படுகிறது..

இசையமைப்பாளர் இளையராஜவின் மகள் பவதாரிணி(47) பின்னணி பாடகியான இவர் 1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் திதிதே தாளம் பாடலின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து, ராசய்யா, அலெக்சாண்டர், தேடினேன் வந்தது, அழகி, தாமிரபரணி, உளியின் ஓசை உள்ளிட்ட பல படங்களுக்கும் பாடல் பாடியுள்ளார். சபரிராஜ் என்பவரை மணமுடித்தார். 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ என்ற திரைப்படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடல் பாடியதற்காக பவதாரிணிக்கு தேசிய விருது கிடைத்தது. சில மாதங்களாகவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் நேற்று  சிகிச்சை பலனின்றி இலங்கையில் காலமானார். பவதாரிணியின் உடல் நேற்று மதியம் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.  சென்னை தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டில் அஞ்சலிக்காக வைக்கபட்டுள்ளது. இதையடுத்து இன்று இரவு சொந்த ஊரான தேனிமாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப்பில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. லோயர்கேம்ப் குருவனூத்து பாலம் அருகே இளையராஜாவுக்கு 2.5ஏக்கர் பரப்பளவில் பங்களா உள்ளது. இங்கு இளையராஜா தனது குடும்பத்தினருடன் தங்குவதற்கான அறைகள், தியான மண்டபம் உள்ளிட்டவை உள்ளன. இந்த வளாகத்தில் இளையராஜாவின் அம்மா சின்னத்தாய், மனைவி ஜீவா ஆகியோரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *