தமிழகத்தில் பேட்டரியால் இயங்கும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிச்சலுகை வழங்கப்படும் என அரசு இன்று அரசாணை வெளியிட்டு உள்ளது. நடப்பு ஜனவரி 1ம் தேதி முதல் 2025ம் ஆண்டு டிசம்பர் 31 வரையில் வரிவிலக்கு அமலில் இருக்கும் என அதில் கூறப்பட்டு உள்ளது. ஏற்கனவே 50 % வரிச்சலுகை இருந்த நிலையில் அது இப்போது 100% மாக உயர்த்தப்பட்டு உள்ளது.