ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சுடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. போட்டியின் இறுதியில் திவன் கன்வே அரை சதம் எடுத்தார். எம்.எஸ்.தோனி 32 ரன்களும், தொடர்ந்து ரகானே31 ரன்களும், ஷிவம் துபே மற்றும் ருத்துராஜ் தலா 8 ரன்களும், அலி 7 ரன்களும், ஜடேஜா 25 ரன்களும், ராயுடு ஒரு ரன்னும் எடுத்தனர்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை சந்தீப் சர்மா வீசினார். முதலில் 2 பால்கள் வைடு கொடுத்தார். இதனால் 6 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. அடுத்த 2 பந்துகளையும் டோனி சிக்சருக்கு விரட்டினார். எனவே 3 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது.
4வது பந்தில் டோனி ஒரு ரன் மட்டுமே எடுத்தார். அப்போது சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் திரண்டிருந்த பெரும்பாலான ரசிகர்கள் சென்னை அணியின் வெற்றிக்காக ஒட்டுமொத்தமாக பிரார்த்தனை செய்த தை காபணமுடிந்தது.
அதே நேரத்தில் சந்தீப் சர்மா நுணுக்கமாக பந்து வீசினார். இதனால் அடுத்த பந்தை சந்தித்த ஜடேஜாவும் ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.
எனவே கடைசி பந்தில் 5 ரன் எடுத்தால் வெற்றி பெற்றுவிடலாம். இதை டோனி செய்து காட்டுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கடைசி பந்தை சிக்சருக்கு தூக்க முடியாதவாறு பந்து வீசிய சந்தீப் சர்மா அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே டோனி எடுத்தார். எனவே 3 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி வாய்ப்பை இழந்தது.
ராஜஸ்தான் உடனான போட்டியில் தோல்வி அடைந்த பிறகு சென்னை அணி கேப்டன் டோனி அளித்த பேட்டியில் கூறியதாவது:- “மைதானம் பெரிய அளவில் ஸ்பின்னர்களுக்கு உதவவில்லை. ராஜஸ்தான் அணியில் அனுபவம் வாய்ந்த ஸ்பின்னர்கள் உள்ளனர். மிடில் ஓவர்களில் ஸ்ட்ரைக் ரொடேட் செய்யாததே தோல்விக்கு முக்கிய காரணம். பேட்டர்கள்தான் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும். சென்னை பவுலர்கள் சிறப்பாக பந்து வீசினர். கேப்டனாக 200வது போட்டி போன்ற சாதனை நிகழ்வுகளை தான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அணிக்கு பங்களிப்பதுதான் முக்கியம்” என்று டோனி தெரிவித்தார்.