மயிலாடுதுறை அருகே உள்ள சித்தர்காடு பகுதியை சேர்ந்த சகாயராஜ் என்பவரது மகன் செபாஸ்டின் (23). கட்டட கான்கிரீட் தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக ஒரு வீட்டின் குளியலறை சுவற்றில் துளையிட்டு பள்ளி மாணவியான சிறுமி குளிப்பதை பார்த்து வந்துள்ளார். இதனை கவனித்துவிட்ட சிறுமி வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிவந்த தனது பெற்றோரிடம் அன்றிரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர், அதன்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார்
செபாஸ்டினை போக்சோ சட்டத்தில் கைது செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.