கரூர் மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் தனபதி நிருபர்களிடம் கூறியதாவது:
கரூரில் அகில இந்திய அளவிலான பெண்களுக்கான கூடைப் பந்து போட்டி வரும் 8 ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த போட்டிகளில் இந்தியா முழுவதும் உள்ள 12 பெண்கள் கூடைப் பந்தாட்ட அணிகள் கலந்து கொள்கின்றனர்.
கரூர் திருவள்ளுவர் விளையாட்டு திடலில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன, பார்வையாளர்கள் சுமார் 5,000 பேர் அமர்ந்து போட்டிகளை கண்டு களிக்கும் வகையில் பலவகையிலான காலரிகள் அமைக்கப்பட உள்ளது.
12 ம் தேதி இறுதி ஆட்டமும் பரிசளிப்பு விழாவும் நடைபெறுகிறது மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்குகிறார்.
இந்த பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் சிறந்த அணிகள் ஆகியவற்றுக்கு 1,40,000 ரொக்கப் பரிசுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது பணத்தில் இருந்து வழங்க உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.