பாட்ஷா படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்து இயக்க விஷ்ணுவர்த்தன் திட்டமிட்டு இருப்பதாகவும் இதில் அஜித்குமாரை நடிக்க வைக்க அவர் விரும்புவதாகவும் தகவல் பரவி உள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பில்லா’ படத்தை அஜித்குமார் நடிக்க ரீமேக் செய்து கடந்த 2007-ல் வெளியிட்டனர். விஷ்ணுவர்த்தன் இயக்கி இருந்தார். இதுபோல் ரஜினியின் ‘பாட்ஷா’ படத்தையும் ரீமேக் செய்ய முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. பாட்ஷா படம் 1995-ம் ஆண்டு வெளியாகி ரஜினியின் வசூல் சாதனை படங்களில் முக்கிய படமாக அமைந்தது. சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் தாதாவாக மாறுவதும் பிறகு அதில் இருந்து விலகி ஊருக்கு சென்று ஆட்டோ ஓட்டி பிழைப்பதும் அங்கும் சில பிரச்சினைகளை எதிர்கொள்வதையும் திரைக்கதையாக அமைத்து சுரேஷ் கோபி இயக்கினார்.
தற்போது பாட்ஷா படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்து இயக்க விஷ்ணுவர்த்தன் திட்டமிட்டு இருப்பதாகவும் இதில் அஜித்குமாரை நடிக்க வைக்க அவர் விரும்புவதாகவும் தகவல் பரவி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக இருந்த படம் கைவிடப்பட்டு உள்ளது. அவருக்கு பதிலாக அஜித் படத்தை இயக்க மகிழ்திருமேனி, விஷ்ணுவர்த்தன் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. அஜித் படத்தை இயக்குவது விஷ்ணுவர்த்தனாக இருந்தால் அந்த படம் பாட்ஷா ரீமேக்காக இருக்கலாம் என்று பேசுகின்றனர். ஆனாலும் இதுகுறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.