செகந்திராபாத் மற்றும் விசாகப்பட்டினம் இடையேயான அதிவேக வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இது 8-வது வந்தே பாரத் விரைவு ரெயில் சேவையாகும். தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களை சுமார் 700 கிலோமீட்டர் அளவிற்கு இணைக்கும் முதல் ரயில் சேவை இது. இந்த வந்தே பாரத் விரைவு ரயில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மற்றும் விஜயவாடா ரயில் நிலையங்களிலும், தெலுங்கானா மாநிலத்தில் கம்மம், வாரங்கல் மற்றும் செகந்திராபாத் ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.