Skip to content

திருச்சி வங்கியில் புகுந்து திருடியவர் கைது

  • by Authour

திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோடு சஞ்சீவி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (33) இவர் திருச்சி தஞ்சாவூர் ரோடு அரியமங்கலம் ரயில் நகர் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார் வழக்கம்போல் வங்கியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.மறுநாள் வழக்கம்போல் வேலைக்கு வந்தார்.வங்கியில் அனைத்து ஏசி எந்திரங்களையும் ஆன் செய்தனர் ஆனால் நீண்ட நேரம் ஆகியும் ஏ.சி செயல்படவில்லை.

அதைப் பார்த்தபோது ஏ.சி எந்திரத்தில் இருந்த காப்பர் வயர்கள் அனைத்தும் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வங்கியின் மேலாளர் கிருஷ்ணமூர்த்தி அரியமங்கலம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில்  இன்ஸ்பெக்டர் சரஸ்வதி வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் விசாரணை நடத்தினார். விசாரணையில் வங்கியில் இருந்த 5 ஏ.சி எந்திரங்களிலும் காப்பர் வயர்களை திருடியது திருச்சி தாராநல்லூர் வீரமா நகரை சேர்ந்த வெங்கடேசன் என்பது தெரியவந்தது.அவரைக் கைது செய்த போலீசார் 5 ஏ.சி எந்திரங்களிலும் திருடிய காப்பர் வயர்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!