தர்மபுரி மாவட்டம் நெல்லி நகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகன் 31 வயதான ராஜசேகர். இவர் திருச்சியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் பணிபுரிந்து வருகிறார். அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை எம் எஸ்.எம்.தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் .இவரது மகன் 32 வயது கீர்த்தி ஸ்ரீனிவாசன். நண்பர்களான இன்று தெலுங்கு வருடப்பிறப்பை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் பொழுதுபோக்கிற்காக திருச்சி முக்கொம்பு சுற்றுலா தளத்திற்கு வந்தனர். அப்போது காவிரி ஆற்றில் 36 வது மதகின் அருகில் நின்று குளித்தனர். இதில் எதிர்பாராத விதமாக இரண்டு பேரும் தண்ணீரில் மூழ்கினர். கீர்த்தி ஸ்ரீனிவாசனை அருகில் இருந்தவர்கள் மீட்டனர்.தண்ணீரில் மூழ்கிய ராஜசேகரை தேடுதலுக்கு பிறகு ஸ்ரீரங்கம் தீயணைப்பு மீட்பு குழுவினர் சடலமாக மீட்டனர். வாத்தலை போலீசார் உடலை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.