Skip to content
Home » கடன் கட்டாத தொழிலதிபர்…. தர்ணாவில் ஈடுபட்ட வங்கி அதிகாரி…

கடன் கட்டாத தொழிலதிபர்…. தர்ணாவில் ஈடுபட்ட வங்கி அதிகாரி…

  • by Authour

வேலூர் திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் விஷமங்கலம் கிராமத்தை சேர்ந்த அருணகிரி தனது ஹார்டுவேர் கடை விரிவாக்கத்திற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.5 கோடி கடன் பெற்றிருக்கிறார். மாதந்தோறும் செலுத்த வேண்டிய கடன் தவணைத் தொகையை அருணகிரி செலுத்தாததால் இது குறித்து வங்கி சார்பில் நோட்டீஸ்களும், எச்சரிக்கை கடிதங்களும் பல முறை அனுப்பப்பட்டன. ஆனாலும் எதற்கு அசராத அருணாகிரி வங்கிபக்கமே தலைகாட்டவில்லை/ அசலும். வட்டியும் சேர்ந்து ரூ.1.75 கோடி நிலுவைத் தொகை இருந்ததால் அதை உடனடியாக கட்டக் கோரி அருணகிரி நடத்தி வரும் ஹார்டுவேர் கடைக்கு சென்ற அந்த வங்கி மேலாளர் ஹேமன் குமார், யாரும் எதிர்பார்க்காத வகையில் கடை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
காவல்துறையினர் வங்கி மேலாளர் ஹேமன் குமாரிடம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர் போராட்டத்தை முடித்துக் கொண்டார். தமிழகத்தில் இதுவரை யாரும் நடத்திடாத வகையில் நூதன போராட்டத்தை நடத்தி கவனம் ஈர்த்திருக்கிறார் வங்கி மேலாளர் ஹேமன் குமார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *