திருச்சி மாவட்டம், கம்பரசம் பேட்டை பகுதியை சேர்ந்த லோகேஷ் (35)என்பவர் லால்குடி பகுதியில் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் சமயபுரம் அருகே மேலவாளாடி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற லோகேஷ் என்ற ஸ்ப்ளெண்டர் பைக்கில் எதிரே வந்த புல்லட் பைக் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே லோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.