புதுக்கோட்டை கற்பகவினாயகர் திருமணமண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக( ம )நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் விழா நடந்தது.
ஆட்சியர் மு.அருணா தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடன்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயலெட்சுமிதமிழ்செல்வன், மாநகராட்சி துணை மேயர் எம்.லியாகத்தலி,மகளிர் திட்ட இயக்குனர் கே .ஸ்ருதி, உள்ளாட்சி அமைப்புகளின்பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
