Skip to content

பங்காரு அடிகளார் உடல் இறுதிச்சடங்கு….. இன்று மாலை அரசு மரியாதையுடன் நடக்கிறது

  • by Authour

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தினை கடந்த 53 ஆண்டுகளுக்கு முன்  உருவாக்கியவர்  ஆன்மிக குரு பங்காரு அடிகளார்.   இந்த சித்தர் பீடத்தில் கருவறைக்கு பெண்களும் சென்று  பூஜை செய்யலாம்.  இங்கு  செல்லும் பக்தர்கள் செவ்வாடை அணிந்து செல்வார்கள்.  இந்த பக்தர்கள் பங்காரு அடிகளாரை   அம்மா என்று தான் அழைப்பார்கள். 82வயதான அவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணச் செய்தியை அறிந்து பக்தர்கள் மேல்மருவத்தூரில் தற்போது குவிந்து வருகிறார்கள்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக, அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. அவருக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதனிடையே பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் மேல்மருவத்தூர் செல்கிறார். இந்நிலையில் பங்காரு அடிகளாரின் இறுதிச்சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

இந்நிலையில் பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். வருகிற  பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்  பங்காரு அடிகளார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“அம்மா பங்காரு அடிகளாரின் புரட்சிகரமான சிந்தனைகளை நான் மதிக்கிறேன். அனைத்து பெண்களையும் கோவிலில் பூஜை செய்ய வைத்தவர் அவர். சாமானியர்களின் சாமியாக விளங்கியவர் அவர். ஞாயிற்றுக்கிழமை தோறும் இலவச மருத்துவ முகாம்களை நடத்தினார். நமது பிரதமரை சந்தித்து பத்மஸ்ரீ விருதினை அவர் பெற்றார்.இந்த இழப்பை தாங்கும் சக்தியை நான் உட்பட அவரது பக்தர்களுக்கு இறைவன் வழங்க வேண்டுகிறேன்” என்று அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!