ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும், குறிப்பிட்ட5 அணிக்கு எதிராக 2 முறையும், 4 அணிக்கு எதிராக ஒரு முறையும் என மொத்தம் 14 ஆட்டங்களில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும்அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
நடப்பு தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.
‘பிளே-ஆப்’ சுற்றில் எஞ்சி இருக்கும் ஒரு இடத்தை கைப்பற்றுவது யார் என்பதில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே நீயா? நானா? என்ற போட்டி நிலவுகிறது
இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் , நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அடுத்த சுற்று தலைவிதியை நிர்ணயிக்கும் இந்த ஆட்டம் இரு அணிக்கும் வாழ்வா-சாவா என்ற நிலையில் மிகவும் பரபரப்புடன் இன்று நடைபெற உள்ளது.
சென்னை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலோ அல்லது மழையால் ஆட்டம் ரத்தாகி இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டாலோ அடுத்த சுற்றுக்குள்தகுதி பெற்று விடும். ஆனால் பெங்களூரு அணியை பொறுத்தமட்டில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது.
பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன் எடுத்தால் குறைந்தபட்சம் 18 ரன் வித்தியாசத்திலும், 2-வது பேட்டிங் செய்தால் 200 ரன் இலக்கை 11 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றால் மட்டுமே நிகர ரன் ரேட்டில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி விட்டு அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.
பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன் எடுத்தால் குறைந்தபட்சம் 18 ரன் வித்தியாசத்திலும், 2-வது பேட்டிங் செய்தால் 200 ரன் இலக்கை 11 பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றால் மட்டுமே நிகர ரன் ரேட்டில் சென்னை அணியை பின்னுக்கு தள்ளி விட்டு அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும்.
பெங்களூருவுக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும் சென்னை அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்க மல்லுக்கட்டும். அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பைஉறுதி செய்து உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்த பெங்களூரு அணி எல்லா வகையிலும் வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 21 முறையும், பெங்களூரு அணி 10 தடவையும் வென்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் டிரா ஆனது. சென்னை எப்படி டோனியின் கோட்டையோ, அதுபோல பெங்களூரு கோலியின் வலிமையான கோட்டை. எனவே ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு ஆர்சிபிக்கு கிடைக்கும். எனவே போட்டி இன்று நடந்தால் பரபரப்புக்கும், திக் திக் நிகழ்வுகளுக்கும் பஞ்சம் இருக்காது. மொத்தத்தில் இன்று போட்டி நடந்தால் சபாஷ் சரியான போட்டி என்ற வகையில் ரசிகர்களுக்கு சரியான விருந்தாக அமையும்.
ஆனால் போட்டி நடக்க வேண்டுமா, வேண்டாமா எ ன்பதை வருணபகவானே தீர்மானிக்க போகிறான். ஏனென்றால் இன்று மாலை பெங்களூருவில் மழைபெய்யும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது.