இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் கடந்த 16ம் தேதி தொடங்குவதாக இருந்தது. அன்று பெங்களூருவில் கனமழை பெய்ததால் அன்றைய தினம் ஆட்டம் தொடங்கவில்லை. எனவே நேற்று ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் செய்தது. இந்தியாவின் மோசமான ஆட்டத்தால் 46 ரன்னுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய வீரர்கள் 5 பேர் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்கள்.
அதைத்தொடர்ந்து நியூசிலாந்து பேட்டிங் தொடங்கியது. நேற்று ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து(50 ஓவர்கள்)180 ரன்கள் எடுத்திருந்தது. இன்று காலை தொடர்ந்து ஆடினர். மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நியூசிலாந்து 402 ரன்கள் சேர்த்தனர். ஜடேஜா, குல்தீப் தலா 3 விக்கெட்டுகளையும், சிரா”் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். பும்ரா, அஸ்வினுக்கு தலா 1 விக்கெட்டுகள் கிடைத்தன.
முதல் இன்னிங்சில் நியூசிலாந்து இந்தியாவை விட 356 ரன்கள் அதிகம் எடுத்துள்ள நிலையில், இந்தியா தோல்வியை தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் 2ம் இன்னிங்சை தொடங்கினர். தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித், ஜெய்ஸ்வால் இறங்கினர். ஆட்டம் இன்னும் 2 நாட்கள் இருக்கிறது. அதுவரை இந்தியா தாக்குபிடிக்காவிட்டால் தோல்வியை தவிர்க்க முடியாமல் போய்விடும்.