கர்நாடகா அரசு தமிழகத்திக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு, அம்மாநில விவசாயிகள் மற்றும் பாஜக தரப்பில் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில், காவிரியில் கூடுதல் நீர் திறந்து விட கோரி தமிழக அரசு தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், காவிரி விவகாரம் குறித்து முடிவெடுக்க, கர்நாடகாவில் இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது. பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மாநாட்டு அரங்கத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.இதில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
காவிரி விவகாரம்….. பெங்களூருவில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
- by Authour
