Skip to content
Home » HMPV வைரஸ் தாக்குதல்- பெங்களூருவில் 2 குழந்தைகள் பாதிப்பு

HMPV வைரஸ் தாக்குதல்- பெங்களூருவில் 2 குழந்தைகள் பாதிப்பு

ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) என்று அழைக்கப்படும் இதனால் ஏற்படும் நோய் பாதிப்புகள் அதிக அளவில் வடக்கு சீனாவில் பதிவாகி வருகின்றன.

“இந்த வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டால், அந்த நபருக்கு சளி மற்றும் கோவிட்-19 போன்ற அதே அறிகுறிகள் தென்படும். இந்த நோய் பாதிப்பு வேகமாகப் பரவி வருகிறது”

சீனாவின் அண்டை நாடான இந்தியா,  இந்த நிலைமையைக் கண்காணித்து அதே நேரத்தில், இந்திய சுகாதார சேவைகளின் இயக்குநர், தற்போது இதுகுறித்துக் கவலை கொள்ள எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்று கூறியுள்ளார்.

மத்திய குடும்ப நலத்துறை அமைச்சகமும் இந்திய சுகாதார சேவைகள் இயக்குநரின் தலைமையிலான கூட்டுக் கண்காணிப்புக் குழுவும் இன்று (ஜனவரி 5) கூடி ஆலோசனை மேற்கொண்டன. அதில் சில விஷயங்கள் குறித்து முடிவுகள் எட்டப்பட்டன.

சீனாவில் இந்த நோய் பாதிப்பு அசாதாரணமானது அல்ல. HMPV வைரஸ் இந்த நேரத்தில் தொற்றும் ஒரு பொதுவான நோய்க்கிருமியாகும். நிலைமையை அந்நாட்டு அரசு அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

இந்த நோய் பாதிப்பு குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு சீனாவை உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் சுவாச கோளாறு ஏற்படுவதுடன் தொண்டை வறட்சி, இருமல், சளி  தொந்தரவு ஏற்படும். தும்மல், இருமல் மூலம் இது பரவும்.

 எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களையும்,  நுரையீரல் பிரச்னை உள்ளவர்களையும்  இது அதிகம் தாக்கும்.

இந்த நிலையில் HMPV வைரஸ் தாக்குதல்    இந்தியாவுக்கும் வந்து விட்டது. பெங்களூருவில்  3 மாத பெண் குழந்தை,  8 மாத ஆண்குழந்தைக்கு இந்த தாக்குதல் ஏற்பட்டு இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  இவர்களில் 3 மாத பெண் குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டது.  8 மாத குழந்தை தொடர்  சிகிச்சையில் உள்ளது.