பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் டெஸ்ட் தொடங்குவதாக இருந்தது. ஆனால் நேற்று முதல் பெங்களூருவில் மழை கொட்டத் தொடங்கியது. இன்றும் மழை விட்டு விட்டு ெ பய்து கொண்டே இருந்தது. இதனால் டாஸ் கூட போடாத நிலையில் இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக மதியம் 2.30 மணி அளவில் அறிவிக்கப்பட்டது.
