இந்தியா- நியூசிலாந்து மோதும் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நேற்று தொடங்குவதாக இருந்தது. மழை காரணமாக நேற்று ஆட்டம் நடைபெறவில்லை. இன்று காலை ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா மிக மோசமான நிலையில் ஆடி வருகிறது. ஓவருக்கு ஒன்றரை ரன் என்ற அடிப்படையில் ரன்களை சேகரித்து வருகிறது. மதிய உணவு இடைவேளைக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. இதில் கோலி, சர்ப்ராஸ்கான், ஜடேஜா, கே. எல் ராகுல் ஆகிய 4 பேரும் டக் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்ஸ்வால் 13, கேப்டன் ரோகித் சர்மா 2, எடுத்து அவுட் ஆனார்கள்.
. மதிய உணவு இடைவேளைக்கு பின்னர் அஸ்வின் களம் இறங்கினார். அவரும் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.
தொடர்ந்து இந்தியா 31.2 ஓவரில் 46 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்தின் பந்து வீச்சில் இந்திய வீரர்கள் திணறிவிட்டனர்.ஓ ரூர்க் மட்டும்4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹென்றி 5 விக்கெட், சவுதி 1 விக்கெட் எடுத்தனர். இந்தியாவின் டெஸ்ட் வரலாற்றில் இது 3வது மோசமான ஆட்டம். இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 36 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிராக 45 ரன்களிலும் ஆட்டம் இழந்து உள்ளது. இவர்களில் 5 பேர் டக் அவுட். பண்ட் அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
.