வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இந்த இடஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறுவதாகவும், இதை ரத்து செய்யவேண்டும் எனவும் டாக்கா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு 30 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 30 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று கூறி ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்தது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடித்து வருகின்றனர்.
இதனால் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.இந்த போராட்டத்தில் நடந்த வன்முறையில் இதுவரை32 பேர் உயிரிழந்தனர். ஆனாலும் வன்முறை கட்டுக்கடங்கவில்லை. தீ வைப்பு, அரசு சொத்துக்கள் சேதம் என கலவரம் நீடிக்கிறது.இதனால் டாக்கா உள்ளிட்ட நகரங்களில் போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.