மாணவர்களின் போராட்டம் காரணமாக, பிரதமர் பதவியில் இருந்து விலகிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தனது சகோதரியுடன் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் மூலம் தனது அரண்மனையில் இருந்து ஹெலிகாப்டரில் டாக்கா சென்றார். அங்கிருந்து ராணுவத்திற்கு சொந்தமான சி-130 விமானம் மூலம் நாட்டை விட்டு வெளியேறினார். முதலில் அவர் எங்கே செல்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று மாலை 5.30 மணியளவில் ஹசீனா வந்த ராணுவ விமானம் டில்லி அருகே உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு வந்தடைந்தது. அங்கு விமானப்படை அதிகாரிகள் அவரை வரவேற்றனர். பின்னர் ஹசீனா தனது சகோதரியுடன் காரில் புறப்பட்டு சென்றார். அவர் ரகசிய இடத்திற்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.