வங்க தேச எம்.பி. அன்வர் உல் அசீம்(56). அவாமி லீக் கட்சியை சேர்ந்தவர். இவர் கடந்த 12ம் தேதி சிகிச்சைக்காக கொல்கத்தா வந்தார். அங்கு 14ம் தேதி காணாமல் போனார். அவரது போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து அவரை கொல்கத்தா மற்றும் வங்க தேச போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று அவர் நியூ டவுன் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் கடத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வங்கதேச தலைநகர் டாக்காவில் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலைக்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை. இவா் 3 முறை எம்.பியாக இருந்தவர்.
