இந்து முன்னணி மாநில தலைவர் சுப்ரமணியம் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்துகின்றனர்.அங்கே சிறுபான்மையாக இருக்கின்ற இந்துக்கள் தங்களுடைய உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட்டு வங்கதேச இந்துக்களை பாதுகாக்க வேண்டும் .
ஆனால் அதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.தமிழகத்தில் இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அழக்கூட உரிமை இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது .ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கின்ற தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.நீதிமன்றத்தை நாடி
ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை இந்து முன்னணி பேரியக்கம் நிச்சயம் வாங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். சுதந்திர தின ஊர்வலங்களுக்கு கூட தமிழகத்தில் தடை விதிப்பது நியாயம் இல்லை .ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை தடை செய்வது ஏற்புடையதல்ல. இவ்வாறு அவர் கூறினார்.