திருச்சி எடமலைப் பட்டிபுதுார் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக எடமலைப் பட்டிபுதுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு புகையிலை விற்ற அதே பகுதியைச் சேர்ந்த கோபிநாத் (23) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 4ஆயிரம் மதிப்புள்ள 2.117 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்றவர் கைது
- by Authour
