ஜெயங்கொண்டத்தில் லாரி மற்றும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் தற்போது போக்குவரத்து நெரிசல் காரணமாக மற்றும் போக்குவரத்து நெரிசல் உள்ள பள்ளி தொடங்கும் மற்றும் விடும் நேரங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக லாரி மற்றும் கனரக வாகன ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் அருகே மகிமைபுரத்தில் அரியலூர் எஸ்பி செல்வராஜ் உத்தரவின் பேரிலும் ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ராமச்சந்திரன் மேற்பார்வையிலும் ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் கொளஞ்சி உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
காலையில் பள்ளி நேரமாகிய காலை ஏழு மணி முதல் 10 மணி வரையிலும் மாலையில் 3 மணி முதல் 5 30 மணி வரையிலும் நகருக்குள் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் உள்ளே வரக்கூடாது, பள்ளி மற்றும் மருத்துவமனை அருகில் அதிக ஒலி எழுப்பும் ஆரன் ஒலி எழுப்பக் கூடாது, ஏர் ஹாரன்களை உபயோகிக்க கூடாது. பெரிய வாகனங்கள் சிறிய வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல வேண்டும், இரவு நேரங்களில் கண்கூசும் விளக்குகள் ஒளியூட்டக்கூடாது வாகனங்களில் பின்புறம் பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்,
வாகனங்கள் சிறிது நேரம் சாலையில் நிறுத்தும்போது முக்கோண வடிவில் கூடிய பிரதிபலிப்பான் டூல்ஸ் உபயோகிக்க வேண்டும், எதிரில் வாகனங்கள் வரும்போது முகப்பு விளக்கை டிம் பிரைட் செய்ய வேண்டும், குடிபோதையில் வாகனங்கள் இயக்கக் கூடாது, தவறான வழியில் ஓவர் டேக்கிங் செய்யக்கூடாது, சிறிது நேரம் வாகனங்கள் சாலையில் நிறுத்தும்போது பார்க்கிங் லைட் உபயோகிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகன ஓட்டுநர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.