Skip to content

இசையமைப்பாளர் தமனுக்கு கார் பரிசாக வழங்கிய பாலையா….விலை எவ்வளவு தெரியுமா?..

தெலுங்கில் கொடிகட்டி பறந்து கொண்டு இருக்கும் இசையமைப்பாளர் தமன், கடந்த சில ஆண்டுகளில் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா) நடிப்பில் வெளியான பல படங்களுக்கு இசையமைத்து, அந்த படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், அகண்டா, வீரசிம்ஹா ரெட்டி, பகவந்த் கேசரி, டாகூ மகாராஜ், போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

இந்த படங்களில் தமனின் பேக்கிரௌண்டு ஸ்கோர், பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.இதன் காரணமாக, நந்தமூரி ரசிகர்கள் அவரை ‘நந்தமூரி தமன்’ எனக் கொண்டாட தொடங்கினர். இந்த பெயரை பாலகிருஷ்ணா மற்றும் அவருடைய மனைவியும் பொது நிகழ்ச்சிகளில் அழைத்திருப்பது சிறப்பாக பேசப்பட்டது.

இதனையடுத்து, நமக்கு நல்ல பாடல்களை கொடுத்து நம்மளுடைய படங்களின் வெற்றிக்கு காரணமாக இருந்த இசையமைப்பாளர் தமனுக்கு எதாவது செய்யவேண்டும் என்பதால் பாலகிருஷ்ணா, அவருக்கு மதிப்புமிக்க Porsche கார் ஒன்றை பரிசாக வழங்கி அவரை கௌரவித்துள்ளார். அடுத்ததாக தமன் அவருடைய அகண்டா 2 படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.

எனவே, இப்போது பரிசு கொடுத்தால் ஒரு சந்தோசமாக அவருக்கு இருக்கும் என்பதால் பாலகிருஷ்ணா பரிசு கொடுத்திருக்கிறார்.  இந்தியாவில் Porsche கார்களின் விலைகள் பொதுவாக ரூ.1.2 கோடி முதல் ரூ.3.2 கோடி வரை இருக்கும்.

காரின் முக்கிய சிறப்பு அம்சங்கள்…

வல்லமைமிக்க என்ஜின்: Panamera, 2.9 லிட்டர் ட்வின்-டர்போ V6 என்ஜினால் இயக்கப்படுகிறது, இது 348 ஹார்ஸ்பவர் மற்றும் 369 பவுண்ட்-ஃபீட் டார்க் வழங்குகிறது.

நவீன தொழில்நுட்ப வசதிகள்: வளைந்த 12.6-இன்ச் டிஜிட்டல் கருவி குழு, மைய டாஷ்போர்டில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு, ஸ்மார்ட்போன் இணைப்பு, மற்றும் 10 ஸ்பீக்கர் ஒலிப்படுத்தும் அமைப்பு போன்றவை பயண அனுபவத்தை மேம்படுத்துகின்றன. பார்ப்பதற்கும் கண்களை கவரும் ஒரு லுக்கில் இருப்பதால் காருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. எனவே, இப்படி விலை உயர்ந்த ஒரு காரை தமனுக்கு பாலகிருஷ்ணா வழங்கியுள்ள நிலையில் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

error: Content is protected !!