பக்ரீத் எனப்படும் ஈகைத் திருநாள் நபியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், துல்ஹஜ் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை குறித்து அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘துல்ஹஜ் மாதத்துக்கான புதிய பிறை 19-ம் தேதி (நேற்று) தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தென்பட்டது. இதையடுத்து, பக்ரீத் பண்டிகை வரும் 29-ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படும்’’ என்று அறிவித்துள்ளார்.