Skip to content
Home » பக்ரீத் பண்டிகை…திருச்சி, கரூர், பள்ளப்பட்டியில் விமரிசையாக கொண்டாட்டம்

பக்ரீத் பண்டிகை…திருச்சி, கரூர், பள்ளப்பட்டியில் விமரிசையாக கொண்டாட்டம்

  • by Senthil

பக்ரீத் என்னும் ஈகைத் திருநாள் இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  கரூர் மாவட்டம்   அரவக்குறிச்சி ஈத்கா மைதனத்திற்கு ஊர்வலமாகச் சென்று கூட்டுப் தொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து
கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர். பிரார்த்தனை முடிவில்  ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாரிக் கொண்டனர்.
பின்பு அவரவர் வசதிக்கு ஏற்ப பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஆடு, மாடு, ஆகியவற்றை குர்பானி கொடுத்தனர். பின்பு அவற்றை உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் பிரித்துக் கொடுத்து மகிழ்ந்தனர்.. பக்ரீத் சிறப்புத் தொழுகைக்காக
ஈத்கா மைதானம் மற்றும் 50 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பக்ரீத் பண்டிகை
கொண்டாடுவதற்காக
வெளிமாநிலங்களில் வணிகம் செய்யும் ஆயிரக் கணக்கான
இஸ்லாமியர்கள் சொந்த ஊர் வந்துள்ளனர்.இதனால் அரவக்குறிச்சி, பள்ளபட்டி உள்ளிட்ட இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகள் களை கட்டியுள்ளது.

குர்பானி கொடுப்பது ஓர் உன்னதமான கடமை என்று

இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது. குர்பானிக்காக பிராணியை பலி கொடுக்க அறுக்கும்போது, அதன் ரத்தச் சொட்டு பூமியில் விழுவதற்கு முன்னதாக இறைவன் இடத்தில் ஒப்புக்கொள்ளப் பட்டதாகிறது. எனவே, மனம் திறந்து குர்பானி கொடுங்கள் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்.

திருச்சியில் இஸ்லாமியர்கள் இன்றைய தினம் பக்ரீத் பண்டிகையினை உற்சாகமாக கொண்டாடினர். மரக்கடை பகுதியில் உள்ள அரசு சையது முர்துசா பள்ளியில் இன்று காலை சிறப்பு தொழுகை நிகழ்ச்சியானது நடத்தப்பட்டது.

இந்த சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். சகோதரத்துவத்தை ஏற்படுத்தும் விதமாக தியாக திருநாள் கொண்டாடப் படுவதாகவும், அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 500 க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதன் பின் ஆடு,மாடு போன்றவற்றை குர்பானி கொடுத்து அந்த இறைச்சியின் ஒரு பங்கை ஏழை எளியவர்களுக்கும், ஒரு பங்கை உற்றார் உறவினர்களுக்கும், ஒரு பங்கை தங்களுக்கும் என பிரித்து கொடுத்து மகிழ்ச்சியுடன் தியாக திருநாளை கொண்டாடி வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் இந்த நிகழ்வில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக முகமது ராஜா , திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர், திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் ஃபைஸ், மாவட்ட செயலாளர் அசரப் அலி, மாவட்ட

பொருளாளர் காஜமியான், மாநில அமைப்பு செயலாளர் மிட்டாய்காதர் ,மாநில செயலாளர் ரபீக் ஆகியோர் கலந்துக்கொண்டனர். கரூரில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகையில்   ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஈத்கா பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் சிறுவர்கள் மற்றும் ஆண்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருமாநிலையூர் மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில்  நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!