Skip to content
Home » டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்…. சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்…. சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

  • by Senthil

டில்லியில் ஆம் ஆத்மி கட்சி அரசில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணையைதொடங்கியது. இதன் அடிப்படையில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, தெலுங்கானா எம்.எல்.சி. கவிதா உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் கடந்த மார்ச் 21 ம் தேதி அமலாக்கத்துறையால் டில்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்காக சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால ஜாமீன் கொடுத்தது. பின்னர் கடந்த ஜூன் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் ஜாமீன் கோரியிருந்தார் . விசாரணை நீதிமன்றமானது அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீனும் வழங்கியது. சிறையில் இருந்து கெஜ்ரிவால் விடுதலையாகும் நிலையில் திடீரென சி.பி.ஐ. அவரை கைது செய்தது. மேலும் அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மீதான உத்தரவை நிறுத்தி வைத்தது.

இந்த சூழலில் தனது கைதுக்கு எதிராகவும், ஜாமீன் கேட்டும் அவர் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த விசாரணை கடந்த 5-ந்தேதி முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு இன்று (வெள்ளிக்கிழமை) காலை தீர்ப்பு அளிக்கப்பட்டது.  கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு தொடர்பாக கெஜ்ரிவால் எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது என்றும்   அமலாக்கத்துறை  விதித்த ஜாமின் நிபந்தனைகள் இந்த வழக்கிலும் பொருந்தும் என்றும் உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது. சிபிஐ சிறப்பு கோா்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!