1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவையில் சங்கிலி தொடர்போல அடுத்தடுத்து பல இடங்களில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்து 60 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த கொடூர சம்பவம் பாஜக தலைவர் அத்வானியை குறிவைத்து நடத்தப்பட்டது. அவரது விமானம் தாமதமாக வந்ததால் அவர் தப்பினார். இது தொடர்பாக அல் உம்மா தலைவர் பாஷா உள்பட பலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ளனர். இந்த நிலையில் பாஷாவின் மகள் தனது தந்தையை விடுதலை செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். பாஷாவை ஜாமீனில் விடுதலை செய்வதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என அரசு கூறியது.இதைத்தொடர்ந்து பாஷாவுக்கு 3 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கி ஐகோர்ட் இன்று உத்தரவிட்டது.