கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறை யினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன்நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதிஆனந்த் வெங்கடேஷ் முன்பு அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை வரும் பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அத்துடன் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.