Skip to content

சமுதாய வளைகாப்பு- சீர்வரிசை வழங்கினார் அமைச்சர் ரகுபதி

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி மாலையீடுபகுதியில்
உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ் சமுதாய வளைகாப்பு விழா  நடந்தது.  100க்கும் மேற்பட்ட  கர்ப்பிணிகள் இதில் பங்கேற்றனர்.

ஆட்சியர் மு.அருணா தலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பங்கேற்று கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை களை வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில்  சட்டமன்ற உறுப்பினர்கள் வை.முத்துராஜா,எம்.சின்னத்துரை, அரசு முன்னாள் வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன்,துணைமேயர் மு.லியாகத்தலி,சமூகநல அலுவலர்க.ந. கோகுலப்பிரியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள்  பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

error: Content is protected !!