நடிகர் பாபி சிம்ஹா கடந்த ஆண்டிலிருந்து கொடைக்கானலில் இருக்கும் பேத்துப்பாறை பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். வீடு கட்டும் பணிகள் மற்றும் அதற்கான தொகையையும், கொடைக்கானலை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஜமீர், காசிம் முகமது ஆகியோர்களிடம் பாபி சிம்ஹா கொடுத்துள்ளார்.
அதன்பிறகு வீட்டை குறைவான தொகையில் கட்டி வைத்து இருந்தது பாபி சிம்ஹாவுக்கு தெரிய வந்து ஒப்பந்ததாரர்க ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்திற்கு மேல் பெரிதாக ஆன காரணத்தால் ஒப்பந்ததாரர்கள் வீட்டை கட்டாமல் பாதியிலேயே சென்று இருக்கிறார்கள்.
அதனை தொடர்ந்து உசேன் பேட்டி ஒன்றில் பேசும்போது.. பாபி சிம்ஹா என் மீது பொய்யான புகார் அளித்து இருக்கிறார் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில் கொடைக்கானல் விவகாரத்தில் தன்னை பற்றி பாபி சிம்ஹா தன்னை பற்றி அவதூறு தெரிவித்ததாகவும், தன்னை மிரட்டியதாகவும், காங்கிரஸ் முன்னாள் எம்பி ஆரூணின் சகோதரர் மகன் உசேன் ரூ.1 கோடி கேட்டு வழக்கு மானநஷ்ட வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார்.