தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் 27 வது பட்டய நாள் விழா நடைப் பெற்றது. பாபநாசம் ரோட்டரி ஹாலில் நடைப் பெற்ற விழாவிற்கு தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக வருங்கால மாவட்ட ஆளுநர் பாஸ்கரன் பங்கேற்றார். உதவி ஆளுநர்கள் ராஜா காளிதாஸ், பிரபாகரன் வாழ்த்தினர். முன்னாள் தலைவர்கள் அசோகன், பிரான்சிஸ் சேவியர் ராஜ், சரவணன், செந்தில் நாதன், சீனிவாசன், விவேகானந்தம், முருகானந்தம், பக்ருதீன் அலி அகமது உள்ளிட்டவர்களுக்கு .ஷீல்டு வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் முன்னாள் செயலர்கள் செந்தில் கண்ணன், அசோகன், செல்வ குமார், கஸ்தூரி கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர். செயலர் சிலம்பரசன் நன்றி கூறினார்.