சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்பிறந்தநாளை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடும் வகையில்சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாபா திரைப்படம் இன்று வெளியிடப்பட்டது. திருச்சி.LA.சினிமா திரையரங்கில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக வான வேடிக்கை வெடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாபா படப்பெட்டி ஊர்வலமாக ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் கலீல் தலைமையில் கொண்டு வந்தனர். உடன் இணைச் செயலாளர் கர்ணா எஸ்டி ராஜ் ராயல் ராஜ் சுதர்சன் பாலன் விடிவெள்ளி ராஜ்குமார் , அலெக்ஸ், நாசர், சத்தியா, ராஜேந்திரன் உள்ளிட்டா ஏராளமான மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடினர்.