Skip to content

கஜகஸ்தானில் விமான விபத்து 58 பேர் பலி…

  • by Authour

அஜர்பைஜானின் பாகுவில் இருந்து ரஷ்யாவுக்கு 72 பேரை ஏற்றிக்கொண்டு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. கஜகஸ்தானில் அக்டாவ் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு பலமுறை வானில் வட்டம் அடித்தது. விமானி நீண்ட நேரம் முயற்சி செய்தும் விபத்தை தவிர்க்க முடியவில்லை. பயணிகள்,, விமான சிப்பந்திகள் என மொத்தம் 72 பேருடன் சென்ற விமானம் கீழே விழுந்து தீப்பற்றி எரியும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்ற 58 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

error: Content is protected !!