Skip to content
Home » கோவையில் ஐயப்ப பூஜை அன்னதானம் வழங்கும் விழா…. இஸ்லாமியர்கள் பங்கேற்பு..

கோவையில் ஐயப்ப பூஜை அன்னதானம் வழங்கும் விழா…. இஸ்லாமியர்கள் பங்கேற்பு..

கோவை ஸ்ரீ பம்பாவாசா ஐயப்ப பக்தர்கள் சார்பாக 20 ஆம் ஆண்டு ஐயப்ப பூஜை மற்றும் அன்னதானம் வழங்கும் விழா சாய்பாபாகாலனி கே.கே.புதூர் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. அதிகாலை கணபதி ஹோமம்,அதனை தொடர்ந்து ஐயப்பன் பஜனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற மஹா அன்னதானத்தை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி மற்றும் ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.இராமசாமி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.சமத்துவத்தை போற்றும் விதமாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஐயப்பன் பூஜை அன்னதான விழாவில் அந்த பகுதியில் உள்ள இஸ்லாமியர்களும்

கலந்து கொண்டனர்.இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி,தமிழக முதல்வர் சகோதரத்துவத்தையும்,சமத்துவத்தையும் தொடர்ந்து பேணி காக்க வேண்டும் என்று கூறுவதாகவும்,அதன் அடிப்படையில் கோவையில் இது போன்ற சமத்துவத்தை போற்றும் வகையில் அன்னதானம் நடைபெறுவதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சாய்பாபாகாலனி தி.மு.க.பகுதி கழக செயலாளர் கே.எம்.ரவி,ஜீவசாந்தி சலீம்,
பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் அபுதாகீர்,கோவை தல்ஹா,அசார் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீபம்பாவாசா ஐயப்ப பக்தர்கள் குழுவினர் கண்ணன்,குமார், சுரேஷ்,முரளி,புஷ்பராஜ்,சுப்ரமணி,கனகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்