Skip to content

கரூர் மாரியம்மன் கோவிலில் இருந்து ஐயப்ப சுவாமி திருவீதி உலா

  • by Authour

கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் ஏராளமான ஐயப்ப சுவாமி பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து தங்களது நேர்த்தி கடனை செய்து வரும் நிலையில் கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் அருகே தொடர்ந்து ஒன்பதாம் ஆண்டாக கரூர் மாரியம்மன் ஐயப்பன் யாத்திரை குழுவின் சார்பாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது வருகிறது. இந்த நிலையில் இன்று உற்சவர் ஐயப்பனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மகா தீபாராதனை நடைபெற்றது.

இரவு கரூர் மாரியம்மன் ஆலயத்தில் இருந்து சிறப்பு ரத வாகனத்தில் மேளதாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் ஐயப்ப சுவாமி

திருவீதி உலா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் மண்டபம் அருகே குடி புகுந்தது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுவாமிகள் திருவீதி உலாவை சிறப்பிக்கும் விதமாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த ஐயப்ப சுவாமியை ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வழியிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!