வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியப் போது பழங்காலத்து செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டன. தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை அருகே நல்லிச்சேரியில் பாலசுப்பிரமணியன் அய்யரின் இடத்தில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியப் போது பித்தளை பெட்டி ஒன்று கிடைத்தது. அதில் பழங்காலத்து செப்பு நாணயங்கள், ஒரு பைசா நாணயங்கள் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட நாணயங்கள் இருந்தன. வருவாய்த் துறையினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தன் பேரில் வருவாய்த்துறையினர், காவல் துறையினர் விசாரணை மேற்க் கொண்டுள்ளனர்.
