தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சி மன்றம், தஞ்சை ஆர்ட்ஸ் அண்ட் கிராப்ட்ஸ் இணைந்து தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு கோலப் போட்டி நடத்தின. கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சி மன்ற வளாகத்தில் நடந்த ரங்கோலி கோலப் போட்டியில் 25 மாணவிகள், பெண்கள் பங்கேற்றனர். நடுவராக பிரவீன் செயல் பட்டார். இதில் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெய்சங்கர், துணைத் தலைவர் இந்திரா காந்தி, உறுப்பினர்கள் இளங்கோவன், முருகேசன், சுரேஷ் உள்பட கிராம மக்கள் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்றவர்களுக்கு முதல் மூன்று பரிசு மட்டுமல்லாது, பங்கேற்ற அனைவருக்குமே பரிசு வழங்கப் பட்டது.
