தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் வழக்கறிஞூர் அய்யாக்கண்ணு, இவர் விவசாய உற்பத்தி பொருளுக்கு கட்டுப்படியான விலையை மத்திய, மாநில அரசு வழங்கவேண்டும் என போராடி வரகிறார். இதற்காக சென்னை சென்று போராட முடிவு செய்தார். இந்த போராட்டத்திற்காக சென்னை செல்ல இருந்த அய்யாகண்ணுவையும் அவருடன் சேர்ந்த சக விவசாயிகளையும் போலீசார் மடக்கி பிடித்து உறையூர் அருணா தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள முகூர்த்தம் திருமணம் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். அந்த மண்டபத்தில் விவசாயிகள் தங்கி உள்ளனர். இவர் தினந்தோறும் ஏதாவது திட்டமிட்டு போராடி வருவார். அந்த வகையில் இன்றைய ஸ்பெஷல் உறையூர் மண்டபத்தில் தங்கி உள்ளார்.
