விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் போராடி வருகிறது.
அந்த சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று திருச்சி மலைக்கோட்டை உச்சியில் ஏறி அங்குள்ள கார்த்திகை தீப டவரில் ஏறி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் போட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தால் இன்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.