விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தருவதாக கூறிவிட்டு தராமல் ஏமாற்றியதை நிறைவேற்ற கோரியும், விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய கோரியும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரியும், விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5000/- வழங்க கோரியும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் கர்நாடக அரசு மாதாமாதம் தண்ணீர் திறக்க உடனடியாக மத்திய அரசு உத்தரவிட கோரியும், திருச்சி்யில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கடந்த ஒருவாரமாக போராட்டம் நடத்திவருகிறார்கள்.
அந்த வகையில் இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் சுமார் 10 பேர் திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் போராட்டம் நடத்தினர். 2 பேர் பிணங்கள் போல பிணம் எரிக்கும் இடத்தில் படுத்திருந்தனர். மற்ற வி்வசாயிகள் அருகில் இருந்து கோஷங்கள் போட்டனர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.