தொழிலில் வளா்ச்சி அடைந்த நாடே பொருளாதாரத்தில் முன்னேறும். எனவே தொழிலும், உழைப்பும் ஒவ்வொரு நாட்டுக்கும் முக்கியமானது. அந்த வகையில் உழைப்பு, தொழில் இரண்டையும் போற்றும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறை ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்த விழா இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உழைப்பிற்கு உறுதுணையாக உள்ள ஆயுதங்களின் பயனை உணர்த்தவும், அவற்றை சுத்தம் செய்து அவற்றுக்கு பூஜைகள் செய்யவும் இன்று ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. இன்று காலையிலேயே அனைத்து தொழில் நிறுவனங்களிலும் காலையிலேயே பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அனைவருக்கும் இனிப்பு, பொரி, சுண்டல் போன்றவை பிரசாதங்களாக வழங்கப்பட்டன.
ஆயுத பூஜைையையொட்டி கடந்த இரண்டு நாட்களாக பூஜை பொருட்களை வாங்க மக்கள் மார்க்கெட்டுகளில் அதிக அளவு திரண்டனர். பழங்கள், பூக்கள், மற்றும் குங்குமம், திருநீறு, பத்தி , வாழைக்கன்றுகள், மாவிலைகள் இன்று வழக்கத்திற்கு மாறாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. இதுபோல வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் எல்லா இடங்களிலும் இன்று பூஜைகள் சிறப்பாக நடத்தப்ட்டன.
ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் ஆட்டோக்களை அலங்கரித்து இன்று ஆங்காங்கே பூஜைகள் செய்து ஆட்டம், பாட்டத்துடன் விழா கொண்டாடினர். இதுபோல பெரிய தொழிற்சாலைகளிலும் ஆயுதபூஜைகள் கொண்டாடப்பட்டன.