Skip to content
Home » ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி… கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி… கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

  • by Authour

கரூர் மாவட்ட ஆயுர்வேத மருத்துவர் நலச் சங்கம் சார்பில் ஆயுர்வேத மேளா மின் துறை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். கரூர் மாவட்ட ஆயுர்வேத மருத்துவர் நலச் சங்கம் சார்பில் ஆயுர்வேத மேளா இன்று கரூரில் நடைபெற்றது. இந்த மேளாவில் ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

கண்காட்சியை மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். தொடர்ந்து சென்னையை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவ நிபுணர் பாலமுருகன் மொழிபெயர்த்த அக்னி வேஸரின் அஞ்சன நிதாநம் என்ற நூலை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார். கரூரில், படுக்கை வசதியுடன் கூடிய ஆயுர்வேத மருத்துவமனை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஆயுர்வேத மருத்துவர்கள் சங்கம் சார்பில் அமைச்சரிடம் மனுவாக அளிக்கப்பட்டது.