அயோத்திக்கு ராமர் கோவில் திறப்பு விழாவை தொடர்ந்து திருவெறும்பூர் அருகே பெல் வளாகத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
ஸ்ரீராம ஜென்ம பூமியான அயோத்தியில் கடந்த 500 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஸ்ரீராமர் சிலை ப்ராண பிரதிஷ்டை செய்யப்பட்டு அவரது கோயில் திறப்புவிழா நடைபெற்றதை முன்னிட்டு திருவெறும்பூர் பெல் தொழிற்சாலையின் ஊழியர்களது குடியிருப்பான கைலாசபுரத்தில் உள்ள ஸ்ரீஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் ஸ்ரீசீதா லக்ஷ்மண ஹனுமன் சமேத ஶ்ரீ ராமருக்கு இன்று விசேஷ திருமஞ்சனமும், அயோத்தி கோவில் பிராண
பிரதிஷ்டை விழா நேரடி ஒளிபரப்பு நடந்தது மதியம் பாஜ கட்சி சார்பில்நடந்த அன்னதான விழாவிற்கு திருவப்பூர் வடக்கு மண்டல தலைவர் செந்தில்குமார் தலைமை வைத்தார் மாநில ஓபிசி அணி துணை தலைவர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுபொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள் இந்த விழாவில் பாஜக நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், இந்திரன், பாலமுரளி மாரியப்பன் ,ராம் பிரசாத், செல்வராஜ், குழந்தைவேலு உட்பட பலரும் கலந்து கொண்டனர். மாலை திருவீதி புறப்பாடும் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கோயிலின் ஸ்ரீவேங்கடாசல சேவா சமிதி செயலாளர் முரளி தலைமையில் கமிட்டியினர் செய்துள்ளனர்.