Skip to content

அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி காலமானார்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் தலைமை பூசாரி மஹந்த் சத்யேந்திர தாஸ் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார். 85 வயதான அவர் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 3ம் தேதி ஆபத்தான நிலையில் சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியில் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்தார். சத்யேந்திர தாஸ் தனது 20 வயதிலிருந்தே ராமர் கோவில் தலைமை பூசாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.

error: Content is protected !!